Monday, September 29, 2014

2014 சீசன்-2 (ஜூன்) – பகுதி-6 (விளைச்சல் – கொடிகள் & English Vegetables)

இந்த சீசனின் மிக பெரிய சொதப்பல் இந்த ஏரியா தான். மூன்று பந்தல் தயார் செய்தும் ஒன்றிலும் சாதிக்க முடியவில்லை. புடலை, பாகல், சுரை, பீர்க்கங்காய் என்று அனைத்தையும் முயற்சி செய்து அதனையும் ஊற்றிக் கொண்டது. ஒரு பக்கம் மற்ற காய்கறிகள் எல்லாம் எந்த பிரச்சனையும் இல்லாமல் வந்தாலும் கொடி என்னமோ சரியாய் வருவதில்லை.

செடிகள் பொதுவாய் சரியான வெயில், நல்ல மண், சரியான தண்ணீர் இருந்தால் வளர்ந்து விடும். வளர்ந்த பிறகு பூப்பதிலும், பிஞ்சி பிடிப்பதியும் பெரிதாய் பிரச்சனைகள் வருவதில்லை. ஆனால் கொடிகள் அப்படி இல்லை. முதலில் வளர்ந்து வருவதில் இருந்தே பிரச்னை ஆரம்பித்து விடுகிறது. ஒரு ஐந்து-ஆறு இலைகள் வந்த பிறகு அப்படியே நரங்கி போய் விடுகிறது. சில நம் உயரத்திற்கு வளர்ந்த பிறகு அதன் குருத்து உயிரே இல்லாமல் கொடியின் வளர்ச்சி அப்படியே நின்று போய் விடுகிறது. புடலை செடியும், சுரையும் இப்படி தான் போனது. எவ்வளவோ முயற்சி எடுத்தும் தேற்ற முடியவில்லை.


அடுத்தது பீர்க்கங்காய். இங்கே வேற பிரச்னை. மூன்று கொடிகள் விட்டிருந்தேன். அவ்வளவு செழிப்பாக வளர்ந்தது. கொஞ்சம் ஓவராகவே வளர்ந்தது. இங்கே பிரச்னை காய்ப்பதில். கிட்டதட்ட மூன்று மாதம் ஆகியும் மொட்டு எதுவுமே வைக்க வில்லை. பிடுங்கி போட்டு விடலாம் என்று நினைக்கும் போது மொட்டு வைக்க ஆரம்பித்தது. நிறைய காய் மொட்டுகள் வைத்தாலும் பிஞ்சி பிடித்தது என்னமோ ஒன்றே ஓன்று தான். மற்ற எல்லாமே வெம்பி விடுகிறது, இல்லை பூப்பதே இல்லை. சாம்பிளுக்கு ஒரு காய் மட்டும் கிடைத்தது. அவ்ளோ தான். இவ்வளவு செழிப்பாய் வந்தும் இங்கே ஊற்றிக் கொண்டது.





ஊற்றிய தண்ணீருக்கும், செலவிட்ட நேரத்திற்கும் கொஞ்சம் உருப்படியாய் வந்தது பாகல் மட்டும். ஆனால் இங்கே வேற மாதிரி பிரச்சனை. செடி நன்றாக காய்த்தாலும் பீர்க்கங்காய் கொடிக்கு இடையே மாட்டிக் கொண்டு அமுங்கி போய் விட்டது. அதனாலயே சரியாய் இடம் கிடைக்காமல், வெயில் கிடைக்காமல் காய் குறைந்து விட்டது (பீர்க்கங்காய் இப்படி அநியாயத்துக்கு வளரும் என்று எதிர்பார்க்கவில்லை)


மொத்தத்தில் இந்த சீசனில் கொடி ஏரியா செம ஊத்தல். நிறைய பிரச்சனைகள். அவற்றில் சில

·         நாம் பொதுவாய் நாற்று விடும் போது ஐந்து செடியாவது விடுவோம். பிறகு அதில் ஓன்று-இரண்டு செடி மட்டும் வைக்காமல் அத்தனையையும் வைத்து விடுவோம் (தூர ஏறிய மனம் இல்லாமல்). இனி ஓன்று இரண்டு செடியோடு விட்டு விடனும்.
·         சில செடிகள் முளைத்து வரும் போதே ஒரு செழிப்பற்ற, உயிரற்ற ஒரு தோற்றத்திலேயே வளர்கிறது. விதை தரமற்றதாக, பழையதாக இருக்கலாம். இப்படி வரும் செடியை அவ்வளவு எளிதாக தேற்ற முடிவதில்லை. பிடுங்கி போட்டு விட்டு உடனே அடுத்த செடியை நடுவது நேரத்தை மிச்சப் படுத்தும்.
·         கொடிகளில் மட்டும் தான் இரண்டு விதமான பூக்கள் வரும் (காய் மொட்டு, வெறும் பூ மொட்டு – Male & Female flowers). காய் மொட்டு நிறைய வராமல் பிரச்னை வரும். இதற்கு எதாவது செய்யமுடியுமா என்று பார்க்க வேண்டும்.
·         கொடிகளில் இன்னொரு பிரச்னை தண்டு தடித்து போகுதல். பாகலில் பொதுவாய் இந்த பிரச்னை வரும். தண்டு பகுதி தடித்து போய் வளர்ச்சி அப்படியே நின்று போய் விடும். இதற்கு ஒரு வழி கண்டு பிடித்திருக்கிறேன். விவரமாய் பிறகு எழுதுகிறேன்.

கோஸ், காலி ஃப்ளவர் மற்றும் Broccoli

 இந்த ஏரியாவும் கொஞ்சம் ஊற்றிக் கொண்டது என்று தான் சொல்லவேண்டும். முக்கிய காரணம் தேவையான சத்து பற்றாக்குறை. முதன் முதலாக Grow Bag-ல் முயற்சித்தது. செடிகள் எல்லாம் ரொம்பவே செழிப்பகவே வந்திருந்தது. பிரச்னை எங்கே வந்தது என்றால், பூ வைக்கும் பருவத்தில். பொதுவாக காலி ஃப்ளவர் மற்றும் Broccoli-ஐ ‘heavy eater என்பார்கள். அதாவது இவைகள் நிறைய சத்தை உறிஞ்சும். Grow Bag-ல் வைத்ததனால் முதலில் போட்ட உரம் எல்லாம் இவை வளர்வதற்கே காலி ஆகிவிட்டது என்று நினைக்கிறேன். Broccoli-ல் முதல் பூ ரொம்ப சிறிதாக வந்த போதே இது தெரிந்தது. ஆனால் பிறகு நாம் மண்புழு உரம் போட்டு, அதை செடி கிரகிப்பதர்க்குள் செடி எல்லாம் பூத்து விட்டது. காலி ஃப்ளவர்–ம் அதே கதை தான். Chemical Fertilizer பயன்படுத்துபவர்களுக்கு இந்த பிரச்னை வராது. நாம் உரம் போட்டதும் செடிக்கு சேர்ந்து விடும். Organic முறையில் போகும் போது, மண்புழு உரம் போட்டவுடனே செடிக்கு போய் சேராது. கொஞ்சம் காலம் எடுக்கும். அடுத்த முறை கொஞ்சம் திட்டமிட்டு வைக்க வேண்டும்.



காலி ஃப்ளவர் ஒரு வருடத்திற்கு முன்பு தரையில் போட்ட போது நன்றாகவே வந்திருந்தது (கீழே படம்)
Cauliflower in 2012 in my garden
இந்த முறை கோஸ் Grow Bag-ல் நன்றாகவே வந்தது. ஒரு ஐந்து பூ கிடைத்தது.     


வழக்கம் போல முள்ளங்கி நன்றாக வந்திருந்தது.  
   


(அடுத்த பதிவில் கீரை தோட்டம் எப்படி வந்திருந்தது என்று எழுதுகிறேன்)   








13 comments:

  1. பயனுள்ள செய்திகள் ...பகிற்விற்கு நன்றி

    ReplyDelete
  2. மிகவும் அருமையாக இருக்கிறது காய்களைக்காணுகையில்...நாம் வளர்த்தது எனும் போது...அதன் சுவையே தனி தான். முட்டைக்கோஸ், காளிஃளவர்,பிரக்கோளியுமா..? ஆச்சரியமாக இருக்கிறது.

    பச்சைத்தண்ணியாய் காய்கள்...புகைப்படம் சூப்பர்.

    ஆவலுடன் கீரைக்கு காத்திருக்கிறேன்.

    நன்றி சகோ.

    ReplyDelete
    Replies
    1. //முட்டைக்கோஸ், காளிஃளவர்,பிரக்கோளியுமா..? // ஆமாம் மேடம். பிரக்கோளி சரியாய் வரவில்லை..அடுத்த முறை பார்க்கலாம்..

      நன்றி.

      Delete
  3. அடுத்த சீசன்னில் கொடி வகைகளில் வெற்றி கிடைக்கும் நண்பரே, கோஸ் மற்றும் காலி ஃப்ளவர் வளர்சிக்கு இயற்கை முறை திரவ பயிர் வளர்ச்சி உக்கிகளை பயன் படுத்தி பார்க்கவும். உங்கள் ஆர்வத்திற்கும் முயற்ச்சிக்கும் நிச்சயம் பலன் கிடைக்கும்

    ReplyDelete
    Replies
    1. /திரவ பயிர் வளர்ச்சி உக்கி/ இது இரசாயனத்தில் எளிது. இயற்கை முறையில் அவ்வளவு எளிதா என்ன? விவரம் இருந்தால் கொடுங்கள் அரவிந்த். நன்றி.

      Delete
  4. வாவ் சூப்பர் சிவா. தோட்டம் வைத்த அனுபவங்களை எல்லாம் ஷேர் செய்து, அதன் ப்ளஸ்,மைனஸ் எழுதுவதால் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறீங்க. வெஜிடெபிள்ஸ் பார்த்து பெருமூச்சு மட்டும் விட்டுக்கிறேன். நன்றாக இருக்கு. வாழ்த்துக்கள்.நன்றி

    ReplyDelete
    Replies
    1. நன்றி ப்ரியா

      //வெஜிடெபிள்ஸ் பார்த்து பெருமூச்சு மட்டும் விட்டுக்கிறேன்// :-) உங்க ஊர் கிளைமேட்-க்கு ஆசை இருந்தாலும் விவசாயம் பண்ண முடியாது போல இருக்கே ப்ரியா :-)

      Delete
  5. நன்றி சிவா உங்கள் அனுபவம் மற்றவர்களுக்கு பாடம்,எனது தோட்டத்திலும் இதே பிரச்சனை தான் பீர்க்கு பிஞ்சி விடுகிறது வெம்பிவிடுகிறது.பாகல்,புடல்,சுரைக்காய்,வெள்ளரி பூக்கறது காய்க்காமல் உதிர்ந்து விடுகிறது தோட்டம் போடும் ஆசையே போய்விட்டது நன்றாய் காய்த்த வெண்டையிலும் மாவு பூச்சி தொல்லை என்ன செய்யலாம் சிவா

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சுரேஷ். கொடி ஏரியாவுக்கு இன்னும் கொஞ்சம் ஆராய்ச்சி, நேரம் செலவிட வேண்டிய இருக்கும் போல. இந்த செப்டம்பர் சீசன் எப்படி வருது என்று பார்க்கலாம்.

      வெண்டையில் மாவு பூச்சி தொல்லை ரொம்பவே படுத்துகிறது. முன்பெல்லாம் செடி கொஞ்சம் வளர்ந்து மொட்டு வைக்கும் போது தான் வரும். நான் ஒரு குச்சி வைத்து காலி செய்தாவது செடியை காப்பாற்றுவேன். இந்த வருடம் நர்சரி ட்ரே-ல இருந்து முளைத்து வருவதர்க்குள்ளே அங்கேயே பூச்சி வந்து அதை வளர விடாமல் செய்து விடுகிறது. :-(( .. மறுபடி நேரடியாகவே இப்போது விதைத்து இருக்கிறேன்.

      நிறைய கவனம் எடுத்து கிடைக்கும் இயற்கை பூச்சி கொல்லி தெளிப்பான்களை தவறாமல் தெளித்தால் ஏதும் பலன் கிடைக்கிறதா என்று இந்த முறை பார்க்க வேண்டும்.

      நம்ம பாடே இப்படி என்றால், விவசாயிகள் நிலைமையை நினைத்தால் பயமாக தான் இருக்கிறது. எவ்வளவு தூரம் இயற்கை முறையை பயன்பற்றி வெற்றி பெறுகிறார்கள் என்று தெரியவில்லை.

      இந்த முறை பஞ்சகாவியா கொஞ்சம் ரெகுலரா தெளித்து பார்க்கலாம் என்று இருக்கிறேன்.

      Delete
  6. Nanri sir..ungal anubavathai ..arivai share seythahtarku

    ReplyDelete